12 வயது சிறுமியிடம் ஆபாச சேட்டை! 54 வயது ஆடவருக்கு RM 7000 அபராதம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 8: இந்த மாத தொடக்கத்தில் 12 வயது சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட 54 வயது ஆடவருக்கு, RM7,000 அபராதம் அல்லது அபராதம் செலுத்தத் தவறினால் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜொகூர் பாரு அமர்வு நீதிமன்ற நீதிபதி நார் அஜியாட்டி ஜாஃபர், 54 வயதான ஓங் ஷியோ மிங்கை ஓராண்டுக்கு காவல்துறை கண்காணிப்பில் வைக்கவும் உத்தரவிட்டார்.

மூன்று வயது மகனை உடைய ஓங், ஏப்ரல் 1 அன்று ஜொகூர் பாருவின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் ஆபாசமாக நடந்துகொண்டதாக  குற்றம் சாட்டப்பட்டார்.

இந்தக் குற்றச்சாட்டு, 2017 ஆம் ஆண்டின் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 15(a)(i)-இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்பிரிவின்படி, குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அதிகபட்சமாக RM20,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *