வெளிநாட்டினருடனான திருமண எண்ணிக்கை உயர்வு - உள்துறை அமைச்சர்

top-news

கோலாலம்பூர், பிப். 11-

 2019 முதல் 2025 வரை, மலேசியாவைச் சேர்ந்த முஸ்லிம் அல்லாத குடிமக்கள் வெளிநாட்டு குடிமக்களுடன் மேற்கொண்ட திருமணங்கள் மொத்தம் 55,458 என பதிவாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ நஸூதின் இஸ்மாயில் குறிப்பிட்டார். இந்தத் தகவல், 1976 திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் கீழ் தேசிய பதிவு துறை (JPN) பெற்ற பதிவு விவரங்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு துணைவர்களுள் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் பதிவான முதல் ஐந்து நாடுகளில் சீனா மற்றும் வியட்நாம் முக்கிய இடம் பெற்றுள்ளன. மேலும், சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகளும் அதிக பதிவுகள் கொண்ட பட்டியலில் உள்ளன.

சீன குடிமக்களுடன் மலேசியர்கள் செய்த திருமணங்கள் 9,195 ஆக பதிவாகியுள்ளது. இதில் 3,030 ஆண்கள் மற்றும் 6,165 பெண்கள் அடங்குகின்றனர். வியட்நாம் குடிமக்களுடன் நடந்த திருமணங்கள் 8,620 ஆகவும் (அனைத்தும் பெண்கள்), சிங்கப்பூருடன் 8,802 ஆகவும் (5,910 ஆண்கள், 2,892 பெண்கள்) பதிவாகியுள்ளது என அவர் மேலும் சொன்னார்.

அதேபோல் தாய்லாந்து 5,186 (அனைத்தும் பெண்கள்) மற்றும் இந்தோனேசியா 4,263 (அனைத்தும் பெண்கள்) திருமணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *