BRIEF-1 க்கு வழங்கப்பட்ட ஐந்து கோடி வெள்ளி கூடுதல் நிதியால் 577 இந்திய தொழில்முனைவோர் பயன்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக24-

BRIEF-1 எனப்படும் BANK RAKYAT-டின் இந்திய தொழில்முனைவோர் கடனுதவி திட்டத்தின் கீழ், வழங்கப்பட்டிட்டிருக்கும் ஐந்து கோடி ரிங்கிட் கூடுதல் நிதியால், இதுவரை 577 இந்திய தொழில்முனைவோர் பயனடைந்துள்ளனர்.அதில் 482 பேர் குறு தொழில்முனைவோர் என்றும் எஞ்சிய 95 பேர் சிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் என்றும் தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

"2024ஆம் ஆண்டில் இந்த BRIEF-1 திட்டத்தில் ஐந்து கோடிதான் இருந்தது. இந்த ஆண்டு அதிகரித்ததற்கு தொழில்முனைவோரின் எண்ணிக்கையே காரணம். அதனால்தான் அதிகமாக கொடுத்திருக்கின்றோம். இங்கே தெக்குன், எஸ்.எம்.இ. அமானா இக்தியார், எஸ்.எம்.இ-கோர்ப் என்று நிறைய முகப்புகள் உள்ளன. அனைத்திலும் நாம் அதிகரித்திருக்கின்றோம். வணிகம் எனும் திட்டத்தை என்றார் அவர்.

நேற்று, கோலாலம்பூரில் நடைபெற்ற BRIEF-1 திட்டம் விளக்கக் கூட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதனிடையே, நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் இந்திய தொழில்முனைவோர், ஹலான் சான்றிதழ்களை எளிதாகவும் விரைவாகவும் பெறுவதை உறுதிசெய்ய BANK RAKYAT-இல் ஒரு சிறப்பு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று, நிதியுதவிகளைப் பெற்றுக் கொண்ட சில தொழில்முனைவோர் தங்களின் மகிழ்ச்சியை பெர்னாமாவிடம் பகிர்ந்து கொண்டனர்."இந்த நிதி உதவியின் மூலம் வர்த்தகத்தை மேம்படுத்திக் கொள்வோம். இயந்திரங்களை வாங்குவது, வர்த்தகத்தை விரிவுபடுத்துவது ஆகியவற்றிற்கு உதவியாக இருக்கும்." என்று அவர்கள் கூறினர்.

இந்த நிகழ்ச்சியில் BANK RAKYAT-6 Amanah Ikhtiar Malaysia, TEKUN மற்றும் SME Corp உட்பட அமைச்சின் கீழ் உள்ள தவிர."நிறுவனங்களை உட்படுத்தி 18 தொழில்முனைவோருக்கு மொத்தம் 32 லட்சத்து 75 ஆயிரம் ரிங்கிட்டுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

மற்றொரு நிலவரத்தில், இந்தியர்களுக்கான கிராம திட்டங்கள், தமிழ்ப்பள்ளிகளுக்கு தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆய்வகம், ஆலயங்களுக்கு Dharma MADANI திட்டம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஒரு முறை உதவி ஆகிய நான்கு திட்டங்களை சுமுகமாக செயல்படுத்துவதை உறுதி செய்யவிருப்பதாக ரமணன் தெரிவித்தார்.

"நாம் ஒரு கூட்டத்தை நடத்துவோம். வரும் ஞாயிற்றுக்கிழமை கல்வி அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்துவேன். அதன் பிறகுதான். ஒருங்கிணைப்பு கூட்டத்தை நடத்துவேன். எவ்வளவு சீக்கிரம் இந்தத் திட்டத்தை முடிக்க முடியும் என்பதை பார்க்க வேண்டும் என்றார் அவர். இதனிடையே, பி40 பிரிவு மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு உதவிகள் உடனடியாக சென்றடைவதை உறுதி செய்வதற்கு வரும் செவ்வாய்க்கிழமை ஓர் ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு தலைமையேற்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து எழுப்பிய கேள்விக்கு ரமணன் அவ்வாறு பதிலளித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *