58,428 நான்காம் படிவ மாணவர்களுக்கு ரத்த அழிவுச் சோகை நோய்!

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, நவ. 2-

2016ஆம் ஆண்டு தொடங்கி நான்காம் படிவ மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதார பரிசோதனையில் மொத்தம் 58 ஆயிரத்து 428 பேருக்குத் தலசீமியா எனப்படும் ரத்த அழிவுச் சோகை நோய் கண்டறியப்பட்டு உள்ளதாக டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்தார்.

பெற்றோர், பாதுகாவலர்களின் அனுமதியோடு மேற்கொள்ளப்பட்ட இப்பரிசோதனையில் மொத்தம் 18 லட்சம் மாணவர்கள் உட்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

கல்வி அமைச்சின் ஒப்புதலோடு 3கே எனப்படும் தூய்மை, சுகாதாரம், பாதுகாப்பு ஆகிய அம்சங்களை முன்னிலைப்படுத்தி 2016ஆம் ஆண்டு தொடங்கி 16 வயது மாணவர்களை உட்படுத்தி இந்த தலசீமியா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக டத்தோ ஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.

அதன்வழி தலசீமியாவுடன் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது கண்டறியப்பட்டுள்ளதோடு அதனால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான திருமணங்களின் எண்ணிக்கையையும் குறைக்க உதவுவதால் நேர்மறையான சுகாதார விளைவுகளை அடைவதில் அதன் செயல்திறன் நிரூபிக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

"நாங்கள் பரிசோதனை செய்கிறோம். தலசீமியாவை ஏற்படுத்தும் துணையைத் தேர்வு செய்வதைத் தவிர்ப்பது நல்லது என்பதை அவர்களுக்குத் தெரிவிக்க நாங்கள் சில ஆலோசனைகளையும் வழங்குகிறோம்.என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் கூறினார்.

நேற்று 2025ஆம் ஆண்டு தலசீமியா. பராமரிப்பாளர்களுக்கான 2வது தேசிய மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் சுல்கிஃப்லி அவ்வாறு தெரிவித்தார்.திருமணம் மற்றும் பிரசவத்திற்கு முந்தைய பரிசோதனை திட்டங்களை நாடு தழுவிய அளவில் விரிவுப்படுத்துவதன் மூலம் அடுத்த பத்தாண்டுகளுக்குள் புதிய சம்பவங்களைச் சுமார் 50 விழுக்காடு குறைக்க சுகாதார அமைச்சு இலக்குக் கொண்டுள்ளதாக டாக்டர் சுல்கிஃப்லி தமது உரையில் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *