சிலாங்கூரில் 58 கோயில்களின் நிலப் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது! – V.Papparaidu

top-news
FREE WEBSITE AD

பிப்ரவரி 1,

சிலாங்கூரில் நிலப்பிரச்சனைகளுடன் இருந்த 58 கோயில்களுக்குச் சுமூகமான முறையில் தீர்வுக் காணப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V Papparaidu தெரிவித்தார். வழிபாட்டுத் தலங்களில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க சிலாங்கூர் அரசாங்கத்தில் LIMAS எனும் அரசுத் துறை இயங்கி வருகிறது. பெளத்த, கிறுஸ்துவ, இந்து, சீக்கியம், தாவோயிஸ்ட் ஆகிய சமய வழிபாட்டுகளுக்கானத் துறையாக இந்த LIMAS செயல்பட்டு வருகிறது. LIMAS மூலமாக இதுவரையில் சிலாங்கூரில் உள்ள 58 கோயில்களின் நிலப்பிரச்சனைகள் சுமூகமாகத் தீர்க்கப்பட்டிருப்பதாகவும் சட்டவிதிகளுக்குற்பட்டு இந்த தீர்வுகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V Papparaidu விளக்கமளித்தார். 

ஒரு வழிபாட்டுத் தலம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட வேண்டும் என்பதில் அரசு தெளிவாக இருக்கிறது. அதே வேளையில் கண்மூடித்தனமாகச் சட்டத்தை மீறியிருக்கும் வழிபாட்டுத் தலங்களை நாம் இடிப்பதுமில்லை என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V Papparaidu தெரிவித்தார். இங்கே எல்லாவற்றிற்கும் முறையான நடவடிக்கைக் குழுவும் செயல்திட்டங்களும் உள்ளது. வழிபாட்டுத் தலங்களில் அதிகம் கவனம் செலுத்தி அதன் மாவட்ட, உள்ளூர் நகராண்மைக் கழகம், ஆகிய அரசு அமைப்புகளும் பலகட்ட பேட்டுவார்த்தைகளை மேற்கொண்டு, எந்தவொரு தரப்பினரும் எந்தவொரு சமூகத்தினரும் பாதிக்கப்படாமல் சிலாங்கூர் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என Papparaidu தெரிவித்தார்.

வணிக நோக்கங்களுக்காகவும் தனிநபர் விருப்பத்திற்காகவும் அரசு நிலங்களில் வழிபாட்டுத் தலங்களை அமைக்க உரிமம் இல்லை என்பதில் சிலாங்கூர் அரசு தெளிவாக இருக்கிறது என Papparaidu தெரிவித்தார். அதே வேளையில் வரலாற்றுப்பூர்வமான வழிபாட்டுத் தலங்களை முறையாகவும் சட்டப்பூர்வமாகவும் செயல்பட வைக்க சிலாங்கூர் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் LIMAS இணைத் தலைவருமாகிய V Papparaidu தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *