ஆம்புலன்ஸ் வண்டியை வழிமறித்து மோட்டார் சைக்கிள் ஓட்டிய 5 சிறுவர்கள் கைது!
- Muthu Kumar
- 30 Oct, 2025
ஈப்போ, அக்.30-
கோல கங்சாரில் தெற்கு நோக்கிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 249ஆவது கி.மீட்டரில் ஆம்புலன்ஸ் ஒன்றின் பாதையைத் தடுத்து அபாயகரமான முறையில் மோட்டார் சைக்கிளை ஒட்டிய பதின்ம வயது சிறுவர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடந்த 19ஆம் தேதி சுகாதார அமைச்சின் ஆம்புலன்ஸ் வண்டி அந்நெடுஞ்சாலையின் விபத்து நிகழ்ந்த 260ஆவது கி.மீட்டருக்குச் சென்று கொண்டிருந்த போது பிற்பகல் 3.15 மணிக்கு இச்சம்பவம் நிகழ்ந்ததாக பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ வேஷாம் . நோர்டின் சம்பந்தப்பட்ட 17 வயது சிறுவர்களை அவர்களின் மோட்டார் சைக்கிளுடன் பினாங்கு, புக்கிட் மெர்த்தாஜமில் கடந்த திங்கள்கிழமை பிற்பகல் 3.00 முதல் செவ்வாய்க்கிழமை இரவு 9.00 மணி வரையிலான நேரத்தில் பேரா மாநில சாலைப் போக்குவரத்து விசாரணைத் துறை கைது செய்தது.
கோல கங்சார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தடுப்புக் காவல் உத்தரவை வெளியிட்டதில் அச்சிறுவர்கள் 2 நாட்களுக்குத் தடுப்பில் வைக்கப்பட்டனர். இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டம், 42(1)ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக ஓர் அறிக்கையில் டத்தோ நோர் ஹிஷாம் நோர்டின் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



