RM 4.48 மில்லியன் மதிப்பிலானச் சிகரெட்டுகள் பறிமுதல்! - சுங்கத்துறை
- Sangeetha K Loganathan
- 13 Nov, 2024
நவம்பர் 13,
தேசிய சுங்கத்துறையான JKDM நடத்திய 5 வெவ்வேறு சோதனைகளில் பல்வேறு வகையானக் கடத்தல் சிகரெட்டுகள் முறையான ஆவணங்களின்றி இறக்குமதி செய்யப்பட்டிருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளதாக மத்திய சுங்கத் துறை இயக்குநர் NORLELA ISMAIL தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட 5.82 மில்லியன் சிகரெட் பாக்கேட்டுகளின் மதிப்பு RM 4.48 மில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்கொண்ட 5 தொடர் சோதனைகளில் 3 KLIA அனைத்துலக விமான நிலையம் என்றும் மேலும் 2 இடங்கள் கிள்ளான் துறைமுகமும் KLANG UTAMA பகுதியில் உள்ள பொருள் கிடங்கு என்றும் அவர் தெரிவித்தார்.
பொருள்கிடங்கிலிருந்து மலேசியா முழுவதும் இந்த கடத்தல் சிகரெட்டுகளைச் சந்தைப்படுத்தவிருந்ததாக நம்பப்படும் 38 வயது ஆடவர் ஒருவரும் இச்சோதனையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் NORLELA ISMAIL தெரிவித்தார்.
Kastam Malaysia merampas 5.82 juta batang rokok seludup bernilai RM4.48 juta dalam lima operasi di KLIA, Pelabuhan Klang, dan Selat Klang. Seorang lelaki tempatan ditahan, siasatan lanjut dilakukan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *