மோட்டார் சைக்கிளில் Superman சாகசம் செய்த 5 பள்ளி மாணவர்கள் கைது!
- Thinagaren Sanggaren
- 29 Oct, 2025
அக்தோபர் 29,
நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளோட்டிகள் Superman சாகசம் செய்து அபாயகரமாக மோட்டார் சைக்கிளைச் செலுத்தும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து, சம்மந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்த ஐவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட ஐவரும் 2 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த அக்தோபர் 19இல் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் நோயாளியை ஏற்றிச் சென்ற ஆம்புனஸுக்கு வழிவிடாமல் மோட்டார் சைக்கிளில் Superman சாகசம் செய்த மோட்டார் சைக்கிளோட்டிகள் இவர்கள் என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் கைது செய்யப்பட்ட ஐவரும் 17 வயதுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்கள் என்றும் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 5 பள்ளி மாணவர்களும் குறைந்த வயதுள்ளவர்கள் என்பதால் அவர்களின் பெற்றோர்களையும் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டிருப்பதாகப் பேராக் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Noor Hisam Nordin தெரிவித்தார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



