கிள்ளானில் 662 அந்நிய நாட்டினர் கைது! குடிநுழைவுத்துறை அதிரடி
- Shan Siva
- 25 Sep, 2025
கிள்ளான், செப் 25: போர்ட் கிள்ளான், தாமான் பெரிண்டஸ்ட்ரியன் புலாவ் இண்டாவில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி நடவடிக்கையில் மொத்தம் 662 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 9.30 மணிக்குத் தொடங்கி 1,132 பேரிடம் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக சிலாங்கூர்
குடிநுழவுத் துறை இயக்குநர் கைருல் அமினாஸ் கமாருதீன் கூறினார். கைது செய்யப்பட்டவர்களில்
545 பேர் வங்காள தேசிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்கள் தவிர்த்து, மியான்மரைச் சேர்ந்த 36 பேர், பாகிஸ்தானைச் சேர்ந்த 35 பேர், நேபாளத்தைச் சேர்ந்த 24 பேர், இந்தியாவைச் சேர்ந்த 10 பேர் மற்றும்
இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒன்பது பேரும் கைதுசெய்யப்பட்டதாக அவர் கூறினார்.
16 முதல் 80 வயதுக்குட்பட்ட கைதிகள்,
மேல்
நடவடிக்கைக்காக சிலாங்கூர் குடிநுழைவுத்துறை தலைமையகத்திற்கு கொண்டு
செல்லப்பட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



