சட்டவிரோதமாக இயங்கும் 688 கோயில்கள்! சிலாங்கூர் அரசு!
- THINAGAREN SANGGAREN
- 25 Apr, 2026
ஏப்ரல் 25,
சிலாங்கூர் மாநிலத்தில் முறையான அனுமதியின்றி இயங்கி வரும் 688 கோயில்களை சிலாங்கூர் அரசு அடையாளம் கண்டுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பப்பாராயுடு தெரிவித்தார். மாநில அரசின் தரவுகளின்படி 433 கோயில்கள் அரசு நிலத்திலும் 255 கோயில்கள் தனியார் நிலத்திலும் இயங்கி வருவதாகவும், பட்டியலிடப்பட்டுள்ள 688 கோயில்களும் நிலத்தின் உரிமையாளர்களின் அனுமதியின்றி இயங்கி வருவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பப்பாராயுடு தெளிவுப்படுத்தினார்.
பட்டியலில் அதிகமான சட்டவிரோதக் கோயில்கள் உள்ள மாவட்டமாகக் கோலா சிலாங்கூர் மாவட்டம் திகழ்கிறது. கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் மொத்தம் 207 கோயில்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் பெட்டாலிங் ஜெயாவில் 96 கோயில்கள் சட்டவிரோதமாக இயங்கி வருவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பப்பாராயுடு விளக்கமளித்தார்.
உண்மையில் சிலாங்கூர் மாநிலத்தில் மொத்தம் 285 கோயில்கள் மட்டுமே சட்டப்பூர்வமாக இயங்கி வருவதாகவும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பப்பாராயுடு தெரிவித்தார். சட்டவிரோதமாக இயங்கி வரும் 688 கோயில்களையும் ஆய்வு செய்து பழமையான, வரலாறுகள் கொண்டிருக்கும் கோயில்களைச் சிலாங்கூர் அரசு பாதுகாக்கும் என்றும் கண்மூடித்தனமாக எந்தவொரு கோயில்களும் அகற்றப்படாது என சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் வீ.பப்பாராயுடு உறுதியளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



