செந்தூலில் 68 வீடுகள் இடிப்பு! அரசு நடவடிக்கை
- Shan Siva
- 14 Jan, 2026
கோலாலம்பூர், ஜன 14: இங்குள்ள செந்துல், கம்போங்க் சுபடாக் தம்பஹான் பகுதியில் உள்ள 68 குடியிருப்பு
வீடுகளை இடிக்கும்
நடவடிக்கை எந்தவிதமான எதிர்ப்போ, தூண்டுதலோ இன்றி அமைதியாக நடைபெற்றது.
இந்த இடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த மொத்தம் 206 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகன் செந்துல் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி
அக்மத் சுகர்னோ முகமட் ஸாஹாரி தெரிவித்தார்.
இந்த நீதிமன்ற உத்தரவு
செயல்படுத்தப்படும் முழு காலத்திலும், பொதுமக்களின்
பாதுகாப்பும், ஒழுங்கும் பேணப்படுவதை உறுதி செய்வதே
இந்தப் பணியின் நோக்கம்
என்று அவர் இன்று சம்பவ இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த நடவடிக்கைக்காக, இடிக்கப்பட வேண்டிய வீடுகளின் குழுக்களை அடிப்படையாகக் கொண்டு
காவல் படையினர் ஆறு மண்டலங்களாக (Zones) பிரிக்கப்பட்டு
பணியமர்த்தப்பட்டதாகவும், எவ்வித எதிர்ப்போ அல்லது தூண்டுதலோ
பதிவாகவில்லை என்றும் அவர் கூறினார்.
வீடு காலி செய்யும் அறிவிப்பு குறித்து விளக்கமளித்த அக்மத் சுகர்னோ, நீதிமன்ற உத்தரவு (court writ)
கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, அந்த
உத்தரவு வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள், டிசம்பர் 26 அன்று வெளியேற்ற அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
பெரும்பாலான குடியிருப்பாளர்கள் இந்த
நடவடிக்கைக்கு இடையூறு செய்யவில்லை என்றும், ஆனால் மண்டலம்
4-ல் உள்ள 18 குடியிருப்பாளர்கள் மேலதிக நடவடிக்கைக்காக வழக்கறிஞர்களை நியமித்துள்ளதாகவும் அவர்
கூறினார்.
இது 18 வீடுகளை
உள்ளடக்கியது. இதுகுறித்த மேலதிக நடவடிக்கைகள் நீதிமன்றம் தீர்மானிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில், தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB),
மலேசிய சிவில் பாதுகாப்புப் படை (Civil
Defence Force – CDF) உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள்
ஈடுபட்டதாகவும், அதேபோல் இரண்டு நாட்களுக்கு முன்பு குடிநுழைவுத் துறை ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற உத்தரவை
அமல்படுத்துவது, சம்பந்தப்பட்ட பகுதியில் நடைபெறும் சட்டவிரோத
கட்டுமானம் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுக்கும் சட்ட அமலாக்க நடவடிக்கை என அவர் விளக்கினார்!அ
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



