மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கு 6 வள்ளுவர் சிலைகள்! - சென்னை வி.ஜி.சந்தோசம் வழங்கினார்
- Shan Siva
- 20 Jan, 2026
சென்னை, ஜன 20: விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கலைமாமணி டாக்டர் வி ஜி சந்தோசம் 6 திருவள்ளுவர் சிலைகளை மலேசியாவில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் நிறுவுவதற்கு கொடையாக வழங்கியுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஆறு தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகளை நிறுவுவதற்கு உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் பா கு சண்முகம் வேண்டுகோளை ஏற்று டாக்டர் வி ஜி சந்தோசம் ஆறு திருவள்ளுவர் சிலைகளை சென்னை ஈஞ்சம்பாக்கம் விஜிபி தங்கக் கடற்கரை சந்தோசம் அரங்கில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இதுவரை உலகம் முழுவதும் 191 சிலைகள் வழங்கப் பட்டுள்ளது இந்த ஆறு சிலைகளுடன் 197 சிலைகளாக அதிகரித்துள்ளது.
இந்நிகழ்வில் மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மல்லை சி ஏ சத்யா,
மலேசிய நாட்டின் ஒளவை க முருகன் பிரான்ஸ் நாட்டின் விசு செல்வராஜ் டேனியல் துர்கா சினி MC மற்றும் மலேசிய நாட்டின் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



