கறுப்பு உடைகள் அணிந்து "6 'வங்காளதேசிகள் மலேசியாவுக்குள் நுழைய முயற்சி!
- Muthu Kumar
- 27 Oct, 2025
புக்கிட் காயு ஹீத்தாம், அக்.27-
நேர்த்தியாக உடையணிந்து நிறுவனத்தார் பாணியில் அமலாக்கத் தரப்பினரை ஏமாற்றி நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள் எல்லைப் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டனர்.
இவர்களில் 4 ஆடவர்கள் கருமை நிற உடையணிந்திருந்த வேளையில், மேலும் 2 பெண்கள் பாரம்பரிய சேலையை அணிந்திருந்ததாக புக்கிட் காயு ஹீத்தாம் ஏகேபிஎஸ் கமாண்டர் எஸ்ஏசி முகமட் நசாருடின் மாட் நாசிர் தெரிவித்தார்.இவர்கள் முன்வந்து நின்றது ஏகேபிஎஸ் அதிகாரிகளை ஏமாற்றும் நோக்கத்தை முறியடித்தது மட்டுமின்றி நிர்ணயிக்கப்பட்ட நுழைவு நிபந்தனைகளை இவர்கள் பின்பற்றாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட 30 முதல் 50 வயது மதிக்கத்தக்க இவர்கள் அனைவரும் அசலான சுற்றுப்பயணிகள் அல்ல, மாறாகச் சட்டத்தை மீறும் வகையிலான வேறு நோக்கத்தைக் கொண்டிருக்கக்கூடும் என்று நம்பபடுகிறது.
ஆவணங்களைக் காட்டி சட்டப்பூர்வமாக நுழைந்ததற்கான காரணத்தைக் கூறும்படி கேட்டு அவர்கள் பதில் கூறத் தவறியதைத் தொடர்ந்து வந்த வழியிலேயே திரும்பிச் சொந்த நாட்டிற்குச் செல்லும்படி அனைவருக்கும் உத்தரவிடப்பட்டதாக ஓர் அறிக்கையில் எஸ்ஏசி முகமட் நசாருடின் மாட் நாசிர் குறிப்பிட்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



