ரவாங் - புக்கிட் செந்தோசா சண்டை வீடியோ தொடர்பாக 6 பேர் கைது
- Shan Siva
- 24 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 24: ரவாங், புக்கிட் செந்தோசாவில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியில் நடந்த கலவரம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது.
இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு புகார்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர், 18 முதல் 49 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்களை கைது செய்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் சஷாலி கஹார் தெரிவித்தார்.
இந்த சம்பவம் அதிருப்தி மற்றும் இரண்டு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட தவறான புரிதலில் இருந்து உருவானது என்று முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சம்பவம் ஒரு தனிப்பட்ட தகராறு சம்பந்தப்பட்டது என்று சிலாங்கூர் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இதில் எந்த கும்பல்வாத கூறுகளும் இல்லை, இனப் பிரச்சினைகளுடன் தொடர்புடையது அல்ல என்று சஷாலி கஹார் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நேற்று மாலை 4.30 மணிக்கு சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட சம்பவத்தின் வீடியோ பதிவை போலீசார் கண்டறிந்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும், பொது ஒழுங்கை சீர்குலைக்கும் எந்தவொரு ஊகத்தையும் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஷாசெலி பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



