சிறுவனைத் தாக்கிய 6 மாணவர்கள் கைது! பகடிவதை காணொலி வைரல்!

top-news
FREE WEBSITE AD

ஏப்ரல் 30,

மாணர்கள் சிலர் சிறுவனைத் தாக்கும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதை அடுத்து தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் 6 மாணவர்களைக் காவல்துறை கைது செய்திருப்பதாகப் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர்  Mohd Zaidi Mat Zin தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து பகாங் மாநில சமூகநலத் துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் காணொலியில் இருக்கும் மாணவரைக் காவல்துறை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுத்ததாகவும்  Mohd Zaidi Mat Zin, தெரிவித்தார். 

பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் பெக்கான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பகடிவதையில் ஈடுபட்ட 13 முதல் 16 வயதுள்ள இடைநிலைப்பள்ளி மாணவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர்  Mohd Zaidi Mat Zin விளக்கமளித்தார். பாதிக்கப்பட்ட சிறுவனைத் தாக்கியதற்கான காரணத்தைக் காவல் துறை விசாரித்து வரும் நிலையில் கைது செய்யப்பட்ட 6 மாணவர்களும் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பெக்கான் மாவட்டக் காவல் ஆணையர்  Mohd Zaidi Mat Zin தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *