தீக்கிரையான வீடுகளில் 6 மனித எலும்புக்கூடுகள்!
- Shan Siva
- 03 Feb, 2026
ஜொகூர் பாரு, பிப் 3: ஜொகூர், கங்கார் பூலாய் பகுதியில் உள்ள ஒரு செம்பணைத் தோட்டத்தில் அமைந்திருந்த தீக்கிரையாகிய வீட்டில், குழந்தைகள் நான்கு பேர் உட்பட ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் கொலைக்குப் பலியானதாக நம்பப்படுவதாக
காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜொகூர் காவல் துறை
தலைவர் டத்தோக் அப்துல்
ரஹ்மான் ஆர்சாட் கூறுகையில், கடந்த ஜனவரி 9-ஆம் தேதி, மூன்று மாதங்களாக தொடர்பு இல்லாமல்
இருந்த தனது பிரிந்த மனைவியும் குழந்தைகளையும் தேடி வந்த 48 வயது நபர் இந்த எரிந்த வீட்டில் கருகிய நிலையில் இருந்த
எலும்புக்கூடுகளை கண்டுபிடித்ததாக தெரிவித்தார்.
இறந்தவர்களின் உடல் எச்சங்கள் அனைத்தும் வீட்டின் ஒரே பகுதியில் இருந்தன. உடற்கூறு பரிசோதனை முடிவுகளின்படி, மரணங்கள் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்துள்ளன. எலும்புக்கூடுகள் முழுமையாக இருந்தன என அவர் கூறினார். விசாரணையில் உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தாய், அவரது 5, 9, 17 வயதுடைய மூன்று மகள்கள், 2 வயது மகன் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், அவரது துணை என நம்பப்படும் 29 வயது ஆண் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளார். கிடைத்த தகவல்களின் அடிப்படையில், காவல்துறை ஜனவரி 21-ஆம் தேதி, இஸ்கண்டார் புத்ரி பகுதியில் 19 முதல் 33 வயதுக்கு இடைப்பட்ட மூன்று ஆண்கள் மற்றும் ஒரு பெண் என நான்கு சந்தேகநபர்களை இக்கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்டனர்
காவல் துறை
பதிவுகளின்படி, கைது செய்யப்பட்ட
அனைவருக்கும் முன் குற்றப் பதிவுகள் உள்ளன. மேலும், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனையில், அவர்களில் மூவர் போதைப்பொருள் பயன்படுத்தியதும் தெரியவந்தது.
சந்தேகநபர்களுக்கும் உயிரிழந்த பெரியவர்களுக்கும் முன்பிருந்த தொடர்புகள் உள்ளன. போதைப்பொருள் பழக்கமும் அவர்களுக்கு இருந்துள்ளது. சம்பவம் நடந்த வீடு, பிரதான சாலையிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில், ஒரு கோவிலுக்கு அருகில், பிற குடியிருப்புகளிலிருந்து விலகிய தனிமையான பகுதியில் அமைந்திருந்தது என அப்துல் ரஹ்மான் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



