போர்ட் டிக்சனில் 6 மோட்டார்சைக்கிள்கள் மோதல்; ஒருவர் பலி!

top-news
FREE WEBSITE AD

போர்ட் டிக்சன், ஏப்ரல் 18: இன்று  சிரம்பான் - போர்ட் டிக்சன் நெடுஞ்சாலையில் KM28.3 இல் ஆறு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.

சிரம்பனில் இருந்து போர்ட் டிக்சன் நோக்கிச் சென்ற 17 முதல் 20 வயதுக்குட்பட்ட ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் அந்த மாணவர் ஒருவர் என்று போர்ட் டிக்சன் மாவட்ட காவல்துறைத் தலைவர் மஸ்லான் உடின் கூறினார்.

அதிகாலை 3.15 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியதால், அனைத்து ஓட்டுநர்களும் கட்டுப்பாட்டை இழந்து ஒருவரையொருவர் மோதியதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தின் விளைவாக, 18 வயதுடைய ஆண் ஓட்டுநர் தலையில் பலத்த காயம் காரணமாக சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் பாதிக்கப்பட்ட ஐந்து பேருக்கும் சிறிய காயங்கள் ஏற்பட்டன என்று மஸ்லான் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது!

Seorang pelajar kolej maut dalam kemalangan membabitkan enam motosikal di KM28.3 Jalan Seremban–Port Dickson. Kemalangan berlaku apabila sebuah motosikal melanggar belakang motosikal lain. Lima mangsa lain cedera ringan dan kes disiasat di bawah Akta Pengangkutan Jalan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *