வெளிநாட்டு மாணவர்களுக்கு 6% கல்விக் கட்டணத்தில் சேவை வரி! - அன்வார்
- Shan Siva
- 18 Aug, 2025
சைபர்ஜெயா, ஆக 18: சர்வதேச மாணவர்களுக்கான கல்விக்
கட்டணத்தில் 6% சேவை வரி
விதிக்கும் புத்ராஜெயாவின் முடிவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் இன்று ஆதரித்தார், அதிகரித்து வரும் கல்வி நிதி செலவை ஈடுகட்ட இது அவசியம்
என்று கூறினார்.
மல்டிமீடியா பல்கலைக்கழகத்தில்
நடந்த “தெமு அன்வார்” நிகழ்ச்சியில் பேசிய அன்வார், கடந்த இரண்டு ஆண்டுகளில் தேசிய பட்ஜெட்டில் கல்விக்கு மிகப்பெரிய ஒதுக்கீடு
கிடைத்துள்ளதாகவும், அதைத்
தொடர்ந்து சுகாதாரப் பராமரிப்புக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஆனால் செலவு அதிகரித்து
வருகிறது,
மேலும், (உள்ளூர்)
மாணவர்கள் மீது, குறிப்பாக ஏழை
மாணவர்கள் மீது கூடுதல் சுமையை சுமத்த வேண்டாம் என்று தாங்கள் முடிவு செய்துள்ளோம்
என்று அவர் கூறினார்.
மலேசியா தற்போது 160,000 முதல் 170,000
வெளிநாட்டு மாணவர்களை ஹோஸ்ட் செய்கிறது என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



