ஜாசின் நெடுஞ்சாலையில் 6 வாகனங்கள் மோதல்! அறுவர் காயம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, செப் 25: அலோர் காஜா-மலாக்கா- ஜாசின் நெடுஞ்சாலையில் இன்று காலை செங் பெட்ரோல் நிலையம் அருகே ஆறு வாகனங்கள் மோதிய விபத்தில் அறுவர் லேசான காயமடைந்தனர்.

நகரத்திலிருந்து செங் நோக்கிச் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலைப் பிரிப்பான் மீது காலை 7.30 மணியளவில் மோதியதாக மலாக்கா தெங்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் பாடிட் தெரிவித்தார். பின்னர் வாகனம் எதிரே வந்த பாதையில் சென்று மற்ற ஐந்து கார்கள் மீது மோதியதாக அவர் விளக்கினார். சிறிய காயங்களுடன் பாதிக்கப்பட்ட ஆறு பேரும் மருத்துவ சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த மோதலால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சேதமடைந்த வாகனங்களை அகற்றுவதிலும் எண்ணெய் கசிவை சுத்தம் செய்வதிலும் தீயணைப்பு வீரர்கள் உதவினர்.

சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 இன் பிரிவு 44 இன் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *