முறையாகப் பதிவு செய்யாத 7,000 பள்ளி பேருந்துகள்!

top-news

ஜூலை 8,


பள்ளி மாணவர்களின் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் பள்ளி வேன்கள் அல்லது பேருந்துகள் பெரும்பாலும் முறையாகப் பதிவுச் செய்யப்படாதவை என பள்ளி பேருந்து ஓட்டுநர் சங்கமான GPPBSM வலியுறுத்தியுள்ளது. மாணவர்களின் போக்குவரத்தின் போது பள்ளி பேருந்துகள் பாதுகாப்பாக இருப்பதைத் தமது சங்கம் உறுதிப்படுத்தி வரும் நிலையில் முறையான பாதுகாப்பு அம்சங்களையும் போக்குவரத்து அங்கீகாரங்களையும் கொண்டிருக்காத 7,000 பள்ளி பேருந்துகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி பேருந்து ஓட்டுநர் சங்கமான GPPBSM தலைவர் Dr M Muruga தெரிவித்தார். 

பள்ளி பேருந்து ஓட்டுநர் சங்கமான GPPBSM சம்மந்தப்பட்ட பேருந்து நிறுவனங்களுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் சலுகைகளும் வழிகாட்டலை வழங்கி வருவதாகவும் ஆண்டுக்கு RM40 செலுத்தி முறையான அங்கீகாரத்துடன் பள்ளி பேருந்துகள் செயல்படுவதை GPPBSM சங்கம் உறுதிச் செய்யும் என அதன் தலைவர் Dr M Muruga தெரிவித்தார். சங்கத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பள்ளிப் பேருந்து நிறுவனங்களுக்கும் அதன் ஓட்டுநர்களும் PUSPAKOM, JPJ போன்ற அரசு துறைகளுடன் பட்டறைகளை மேற்கொண்டு வருவதாக பள்ளி பேருந்து ஓட்டுநர் சங்கமான GPPBSM தலைவர் Dr M Muruga தெரிவித்தார்.


Lebih 7,000 bas dan van sekolah didakwa tidak berdaftar secara sah, menjejaskan keselamatan pelajar. GPPBSM menggesa kerajaan bertindak tegas dan memastikan semua kenderaan mempunyai kelulusan serta penyelenggaraan yang betul melalui kerjasama dengan agensi seperti JPJ dan PUSPAKOM

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *