எஸ்பிஎம் 2025 – 7,099 மாணவர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை
- Surendran Sumdraraj
- 31 Mar, 2026
புத்ராஜெயா, மார்ச் 31-
எஸ்பிஎம் 2025 தேர்வு முடிவுகளின் பகுப்பாய்வில், அனைத்து பாடங்களிலும் மொத்தம் 7,099 மாணவர்கள் தேர்வில் பங்கேற்காதது பதிவாகியுள்ளதாக கல்வித் துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் முகமட் அசாம் அகமட் தெரிவித்ததார்.
அவர் மேலும் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டில் 8,108 மாணவர்கள் தேர்வில் பங்கேற்காத நிலையில், 2025 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இது ஒரு நல்ல முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
மாணவர்கள் தேர்வில் பங்கேற்காததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாகவும் அவர் விளக்கினார். அவற்றில், சிலர் வேலைக்குச் சென்றிருப்பது, சிலர் வெளிநாட்டிற்கு குடிபெயர்ந்திருப்பது, விபத்துகளில் சிக்கியிருப்பது மற்றும் குடும்பப் பிரச்சினைகள் போன்றவை முக்கிய காரணங்களாக உள்ளன.
இந்த நிலையைக் கவனத்தில் கொண்டு, மாணவர்கள் தேர்வில் முழுமையாக பங்கேற்க ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை கல்வி அமைச்சு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை மேலும் குறைப்பதற்கான திட்டங்களும் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



