TOTO-வில் RM 40.1 மில்லியன் வென்ற 72 வயது மூதாட்டி
- Shan Siva
- 02 Feb, 2026
கோலாலம்பூர், பிப் 2: பினாங்கைச் சேர்ந்த 72 வயது இல்லத்தரசி ஒருவர், சுப்ரீம் டோட்டோ 6/58 ஜாக்பாட்டில் RM40.1 மில்லியனை வென்றுள்ளார்.
அந்த மாது 1980களில் இருந்து எண்கள் எடுத்து வருவதாகவும், மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, தவறாமல் எடுத்து வருவ்தாகவும் கூறினார்.
"நான் எண்களை
ஒவ்வொன்றாகச் சரிபார்த்து, அவை அனைத்தும்
பொருந்துவதை உணர்ந்தபோது, என்னால் அதை
நம்பவே முடியவில்லை. நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன், மேலும் எளிமையான வாழ்க்கையை வாழ்வேன்," என்று அவர் STM லாட்டரி சென்டர் நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
ஜாக்பாட்
பரிசுக்கு கூடுதலாக RM173,152 போனஸாகக்
கிடைத்தது.
சீனப்
புத்தாண்டுக்கு முன்பு கொடுத்த பெரிய தொகைக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். என்
மனைவி விளையாட்டை வேடிக்கைக்காக மட்டுமே விளையாடுவதால், எங்களுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் இல்லை என்று கணவர் தெரிவித்துள்ளார்..
நாங்கள் எங்கள் குடும்பத்தினருடன் கொஞ்சம் பகிர்ந்து கொள்வோம், மீதமுள்ளதை நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக சேமிப்பு மற்றும் நிலையான வைப்புத்தொகைகளில் வைப்போம் என்று அவரது கணவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



