பொதுப்பணித் துறை திட்டங்களில் 75 சதவீதம் தாமதத்திற்கு ஒப்பந்ததாரர்களே காரணம் - துணை அமைச்சர்
- Tamil Malar (Reporter)
- 11 Dec, 2025
ஜொகூர் பாரு, டிச. 11-
பொதுப்பணித் துறை அமைச்சு (கேகேஆர்) கீழ் நடைபெறும் திட்டங்களில் 75 சதவீதம் தாமதமாவதற்கு ஒப்பந்ததாரர்களே முக்கிய காரணம் எனத் துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மாட் மஸ்லான் தெரிவித்தார்.
திட்ட மேலாண்மையில் உள்ள குறைபாடுகளும், நிதித் திட்டமிடலில் ஒழுங்கின்மையும் இத்தாமதத்திற்கான இரு பிரதான காரணங்கள் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
“கேகேஆர் திட்டங்களில் 75 சதவீத தாமதம் ஒப்பந்ததாரர்கள் காரணமாக ஏற்படுகிறது. மீதமுள்ளவை நிலம் கையகப்படுத்துதல், பயன்பாட்டு சேவைகள் (யூட்டிலிட்டி) தொடர்பான பிரச்சினைகளால் வருகிறது.
மொத்தத் திட்டங்களில் வெறும் 5 சதவீதம் மட்டுமே இத்தகைய பிரச்சினையில் உள்ளன. ஆயினும், இந்த 5 சதவீதத்தையும் முழுமையாகத் தவிர்க்க விரும்புகிறோம் என்று அவர் கூறினார்.
இதன்மூலம், திட்டங்களை காலத்திற்குள் முடிப்பதற்கு ஒப்பந்ததாரர்களின் பொறுப்புணர்வையும் திறமையையும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அமைச்சு வலியுறுத்துகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



