750 ஊசி,எதிரிக்கும் இந்த நிலைமை வரக்கூடாது-நடிகர் பொன்னம்பலம்!
- Muthu Kumar
- 26 Jul, 2025
தமிழ் சினிமாவில் ஒரு வில்லனாக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கியவர் தான் பொன்னம்பலம். வித்தியாசமான முகபாவனையும் உடலமைப்பும் என்று ஒரு காலத்தில் திரையுலகை கலக்கிக் கொண்டிருந்தவர்.
ரஜினி, கமல், அஜித், விஜய் என தொடர்ந்து பலரின் திரைப்படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். குறிப்பாக நாட்டாமை திரைப்படத்தில் இவருடைய நடிப்பு இன்றுவரை பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. மேலும் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன்களில் ஒருவர் என்ற பெயரையும் அவர் பெற்றிருக்கிறார்.
சண்டை கலைஞராக இருந்த பொன்னம்பலம் கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் மூலம் முழு நேர நடிகராக அறிமுகமானார்.அதன் பிறகு வெற்றி விழா மற்றும் பெரிய மருது என நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார். முன்னணி நடிகராக வலம் வந்த பொன்னம்பலத்துக்கு ஒரு கட்டத்துக்கு மேல் பட வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். இருந்தாலும் அவரால் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை வெல்ல முடியவில்லை. அங்கிருந்து வெளியே வந்ததும் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இப்படியான நிலையில் உடல் நலக்குறைவால் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மருத்துவமனையில் பொன்னம்பலம் சிகிச்சையில் இருந்து வருகின்றார்.
இவருக்கு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட நிலையில் சக நடிகர்கள் பலர் இவருக்கு உதவி செய்தனர். இப்படியான நிலையில் நடிகர் பொன்னம்பலம் தனக்கு நடந்த அறுவை சிகிச்சை குறித்து உருக்கமாக பேட்டியளித்துள்ளார். அதில், தனக்கு டயாலிசிஸ் நடந்தபோது 750 முறை ஊசி போடப்பட்டதாகவும் இந்த நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும் உலகிலேயே மிகவும் கொடுமையான தண்டனை டயாலிசிஸ் செய்வதுதான் எனவும் வேதனை தெரிவித்த பொன்னம்பலம் கடவுளின் புண்ணியத்தாலும் பிற நடிகர்களின் உதவியாலும் இப்போது நன்றாக இருப்பதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



