ஆயர் ஈத்தாம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 75 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

செர்டாங், செப். 23-

ஆயர் ஈத்தாம் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்த 75 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் என செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் முஹம்மட் ஃபாரிட் அஹ்மட் கூறினார்.சிலாங்கூரில் உள்ள ஆயர் ஈத்தாம் வனப்பகுதிக்குள் அனுமதியின்றி நுழைந்ததற்காக வன அமலாக்க நடவடிக்கை நடத்தப்பட்டது.இதில் மொத்தம் 75 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையை அமலாக்கப் பிரிவு, சுற்றுச்சூழல் பூங்கா, மாநில பூங்கா பிரிவு, சிலாங்கூர் வனத்துறை. சிலாங்கூர் மாவட்ட வன அலுவலகம், புத்ரா மலேசியா பல்கலைக்கழகம், பூச்சோங் ஜெயா போலீஸ் நிலையம் ஆகியவற்றின் குழுக்களுடன் இணைந்து மேற்கொண்டன.புக்கிட் வவாசன் பூச்சோங்கிலிருந்து நிரந்தர வனப்பகுதிக்குள்
நுழைந்ததற்காக அனைத்து நபர்களும் கைது செய்யப்பட்டனர்.

தேசிய வனவியல் சட்டம் 1985 இன் சட்டத்தின் கீழ் அனுமதி இல்லாமல் அவர்கள் வனப்பகுதியில் நுழைந்துள்ளனர். கைதாளர்கள் மேல் நடவடிக்கைக்காக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.மேலும் சிலாங்கூர் வனத்துறையால் அனைவரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *