திவெட்டுக்கு வெ.790 கோடி ஒதுக்கீடு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக். 11-

திவெட் எனப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சிக்காக மொத்தம் 790 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.உயர் வளர்ச்சித் தொழில்துறையில் தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களுக்கான தேவை அதிகரித்து வருவதை ஈடு செய்வதற்காக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

தேசிய திவெட் மன்றம் 4 கோடியே 50 லட்சம் வெள்ளியைப் பெறும். 10 ஆயிரம் தஃபிஸ் (சமயப் பள்ளிகள்) மற்றும் மத உறைவிடப் பள்ளி மாணவர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கவியல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கல்விக்கான தொகையும் இதில் அடங்கும் என்று. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

மொத்தம் 79 ஆயிரம் திவெட் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, கல்வி அமைச்சின் கீழ் உள்ள திவெட் கல்விக் கழகங்கள் 130 கோடி வெள்ளியைப் பெறும் என்று, மக்களவையில் நேற்று வெள்ளிக்கிழமை பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது நிதி அமைச்சருமான அன்வார் தெரிவித்தார்.

மொத்தம் 300 கோடி வெள்ளியுடன் எச்ஆர்டி கோர்ப், 30 லட்சம் பயிற்சி வாய்ப்புகளை வழங்கும். குறிப்பாக உயர் தொழில்நுட்பம், இலக்கவியல் மற்றும் எரிபொருள் பரிமாற்றத் துறைகளில் இப்பயிற்சிகள் வழங்கப்படும் என்று அன்வார் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *