செந்தோசாவில் ஆடவர் கொலை தொடர்பில் 7 வெளிநாட்டினர் கைது!
- Shan Siva
- 07 Aug, 2025
ஷா ஆலம், ஆக 7: கடந்த ஜூன்
20 ஆம் தேதி, கிள்ளான், செந்தோசாவில் நிகழ்ந்த ஆடவர் ஒருவர் கொலை தொடர்பான
விசாரணைக்கு உதவுவதற்காக இரண்டு பெண்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை போலீசார் கைது
செய்துள்ளனர்.
ஜூலை 23 அன்று பதிவு செய்யப்பட்ட புகாரைத் தொடர்ந்து,
20 முதல் 34 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் கிள்ளானில் கைது
செய்யப்பட்டதாக தெற்கு கிள்ளான் காவல்துறைத் துணைத் தலைவர் கமலாரிஃபின் அமன் ஷா
தெரிவித்தார்.
பண்டார் செந்தோசாவின்
லோரோங் லக்சமனா 20 இல் உள்ள ஒரு
கடைவீதியில் இந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படுவதாக அவர் கூறினார்.
பாதிக்கப்பட்ட 28 வயது வெளிநாட்டு நபர், அவரது வீட்டுத் தோழரால் உடலிலும் கழுத்திலும் கத்தியால்
குத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
மது அருந்தும்
போது சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிதல்,
வாய்த் தகராறாக மாறி, பின்னர் பாதிக்கப்பட்டவர் கத்தியால் குத்தப்பட்டு
கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளத என்று அவர் ஒரு
அறிக்கையில் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில்
இருந்த ஆறு வெளிநாட்டினர் குப்பை கொட்டும் இடத்தில் உடலை புதைத்து அப்புறப்படுத்த
முயன்றதாக கமலாரிஃபின் கூறினார்.
விசாரணை ஆவணங்களை
துணை அரசு வழக்கறிஞரிடம் போலீசார் சமர்ப்பித்துள்ளதாகவும், அனைத்து சந்தேக நபர்களும் இன்று நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்படுவார்கள் என்றும் கமலாரிஃபின் கூறினார்.
முக்கிய சந்தேக
நபரான 34 வயது நபர் மீது கொலைக்
குற்றத்திற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும், மேலும் நான்கு ஆண் சந்தேக நபர்கள் உடலை
மறைத்ததற்காக குற்றம் சாட்டப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



