வேன் மோதி 8 வயது பள்ளி மாணவி மரணம்! ஜொகூரில் பள்ளி நுழைவாயிலில் நிகழ்ந்த சோகம்
- Shan Siva
- 06 May, 2026
கோலாலம்பூர், மே 6: ஜொகூர், பாரிட் சுலோங்கிற்கு அருகிலுள்ள எஸ்.கே. ஸ்ரீ மைமோன் பள்ளியின் நுழைவாயிலில் நேற்று மதியம் ஒரு வேன் மோதியதில் இரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்தார்.
எட்டு வயதான நூர் ஐனி உமைரா ஃபரீஸ், மதியம் சுமார் 12.40 மணியளவில் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோது வேன் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் அச்சிறுமியின் மரணத்தை உறுதி செய்தனர்.
சில பொருட்களை விநியோகித்த பிறகு, பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி, நுழைவாயிலில் இருந்து வெளியே வரும்போது அந்த வேன் சிறுமி மீது மோதியதாகக் கூறப்படுகிறது. தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்ல அங்கு வந்திருந்த பல பெற்றோர்கள் இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா நோரா இஸ்மாயில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பத்து பஹாட் காவல் நிலையத் தலைவர் ஷாருலானுவார் முஷாத்தத் அப்துல்லா சானி, இதுகுறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



