சிலாங்கூரில் ஒழுக்கமற்ற 87 மசூதி நிர்வாகிகள் பணிநீக்கம்! – சிலாங்கூர் அரசு!

top-news

ஜூலை 7,


சிலாங்கூர் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் மசூதிகளின் நிர்வாகிகள் மீது மேற்கொள்ளப்பட்டிருந்த சோதனையில் 87 மசூதிகளின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகச் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மத விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் Mohammad Fahmi Ngah தெரிவித்தார். மசூதிகளில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளில் அதன் நிர்வாகிகள் முழுமையாகப் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் சம்மந்தப்பட்ட 87 மசூதி நிர்வாகிகள் மீது புகார்கள் பெற்ற நிலையில் மாநில அரசு மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் மீதான குற்றங்கள் நீரூபிக்கப்பட்டதால் உடனடியாக அவர்களைப் பணி நீக்கம் செய்துள்ளதாகச் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மத விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் Mohammad Fahmi Ngah தெரிவித்தார்.

முறையான கற்றல் கற்பித்தல் அணுகுமுறைகளைக் கொண்டிருக்காதது, மசூதியின் உள்கட்டமைப்புகளை முறையாக நிர்வகிக்காதது போன்ற நிர்வாகத்துவம் இல்லாத மசூதி நிர்வாகிகள் மீதும் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மத விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் Mohammad Fahmi Ngah தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கும் முன்னர் இது குறித்து பல கட்ட விசாரணைகளை மேற்கொண்டதாகவும் அரசியல் தலையீடுகளையும் தாம் கையாண்டதாகவும் சிலாங்கூர் மாநில இஸ்லாமிய மத விவகார ஆட்சிக் குழு உறுப்பினர் Mohammad Fahmi Ngah தெரிவித்தார்.


Sebanyak 87 pentadbir masjid di bawah pentadbiran kerajaan Selangor dipecat selepas siasatan mendapati mereka cuai dan tidak beretika. Kerajaan negeri menegaskan tindakan diambil demi memastikan pentadbiran masjid kekal telus dan pengurusan dalaman dijalankan secara berhemah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *