போலிசாரைத் தாக்கிய 8 பேர் கைது! 3 போலிசார் காயம்!
- THINAGAREN SANGGAREN
- 27 Mar, 2026
மார்ச் 27,
பினாங்கில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் நுழைவாசலில் இரு கும்பலுக்கு இடையில் கலவரம் ஏற்படும்படியானக் காணொலி சமூகவலைத்தலங்களில் பரவியதைத் தொடர்ந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு வடக்கிழக்குக் காவல் ஆணையர் Abdul Rozak Muhammad தெரிவித்தார். கைகலப்பில் ஈடுபட்ட கும்பலைத் தடுக்க முயற்சித்த 3 காவல் அதிகாரிகளை ஒரு கும்பல் தாக்கியதால் 3 காவல் அதிகாரிகளும் காயங்களுக்குள்ளாகித் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
காவல் அதிகாரிகளைத் தாக்கியதாக நம்பப்படும் 28 முதல் 38 வயதுக்குற்பட்ட 8 உள்ளூர்வாசிகளும் மேலதிக விசாரணைக்காக 3 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் Abdul Rozak Muhammad தெரிவித்தார். காயமடைந்த காவல் அதிகாரிகள் தற்போது சீராக இருப்பதாகவும் வெளிப்புற சிராய்ப்புக் காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருப்பதாகவும் Abdul Rozak Muhammad தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரைக் காவல்துறை அடையாளம் கண்டிருக்கும் நிலையில் அவர்களையும் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி வலியுறுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேலும் சிலரைக் காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாகவும் Abdul Rozak Muhammad தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



