8 ஆன்லைன் மோசடி மையங்கள் முடக்கம்! 57 பேர் கைது
- Shan Siva
- 28 Nov, 2025
கோலாலம்பூர், நவ 28: நவம்பர் 10 முதல் 14 வரை தலைநகர் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகளில் எட்டு ஆன்லைன் மோசடி அழைப்பு மையங்களை போலீசார் முடக்கி 57 நபர்களை கைது செய்துள்ளனர்.
உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை குறிவைத்து நடத்தப்படும் ஆன்லைன் மோசடி கும்பல்களைத் தடுப்பதற்காக, மாவட்ட மற்றும் தற்காப்பு நிலை குழுக்களின் ஆதரவுடன், கோலாலம்பூர் வணிக குற்றப் புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஃபட்ருல் மார்சுஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட 57 சந்தேக நபர்களில், ஐந்து பேர் மலேசியர்கள், 52 பேர் வெளிநாட்டினர் என்று அவர் கூறினார்.
தடுக்கப்பட்ட அனைவரும் போலி வேலை வாய்ப்பு மோசடிகள் மற்றும் இல்லாத கிரிப்டோகரன்சி முதலீட்டுத் திட்டங்கள் உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பதை ஆரம்பக்கட்ட விசாரணைகள் காட்டுகின்றன என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



