மாத இறுதிக்குள் RON 95 பெட்ரோல் RM 1.99 ஆகக் குறைக்கப்படும்! - அன்வார்
- Shan Siva
- 14 Sep, 2025
ஜொகூர் பாரு, செப் 14: இந்த மாத இறுதிக்குள் RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
இப்ராஹிம் மீண்டும் உறுதியளித்துள்ளார்.
செப்டம்பர்
ஏற்கனவே தொடங்கிவிட்டதால் சிலர் கோபப்படுகிறார்கள், ஆனால் எரிபொருள் விலைகள் குறையவில்லை என்று சுட்டிக்காட்டிய
அவர், செப்டம்பர் இறுதிக்கு முன்பே கொஞ்ச நாள்கள் காத்திருங்கள் என்று தாம் தெரிவித்ததாக சாரணர் இயக்கத்தின் 27வது ஆண்டு நிகழ்வில்
அவர் கூறினார்.
உண்மையான சந்தை
விலையுடன் ஒப்பிடும்போது குறைந்த எரிபொருள் விலைகளால் மக்கள் பயனடைவதை உறுதி
செய்வதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு ஏற்ப இந்த நடவடிக்கை இருப்பதாக அவர்
கூறினார்.
நிதியமைச்சராகவும்
இருக்கும் அன்வார், மானியமில்லாத
சந்தை விலை லிட்டருக்கு RM2.50 முதல் RM2.60 வரை ஒப்பிடும்போது RON95 இன் தற்போதைய விலை லிட்டருக்கு RM2.05 என்று கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



