தென் தாய்லாந்தில் RON 95 மானிய விலை பெட்ரோல்! - அமைச்சு தீவிர விசாரணை
- Shan Siva
- 31 Oct, 2025
கோலாலம்பூர், அக் 31: தெற்கு தாய்லாந்தில், சுங்கை கோலோக் உட்பட,
மலேசிய மானிய விலை சமையல் எண்ணெய் மற்றும் RON95 பெட்ரோல் தாராளமாக விற்கப்படுவதாகக் கூறப்படும்
குற்றச்சாட்டுகளை உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சு விசாரிக்கும் என்று அதன் துணை அமைச்சர் ஃபுசியா சாலே தெரிவித்தார்.
ஓப் டிரிஸ் நடவடிக்கையின் கீழ் தனது அமைச்சு அமலாக்கத்தை முடுக்கிவிட்டுள்ளதாகவும், இது RON95 பெட்ரோல், திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு, சமையல் எண்ணெய், சர்க்கரை மற்றும் கோதுமை மாவு போன்ற
பொருள்களை உள்ளடக்கியிருப்பதாகவும் ஃபுசியா கூறினார்.கடத்தலைத் தடுக்க கிளந்தான், பெர்லிஸ், கெடா மற்றும் பேராக் போன்ற எல்லை மாநிலங்களில் உள்ள எட்டு குழிநுழைவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகங்களுக்கும் அதிகாரிகள்
பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கட்டுப்படுத்தப்பட்ட மானிய விலை பொருட்களின் முறைகேடு மற்றும் கடத்தலைத்
தடுக்க (இந்த) எல்லை மாநிலங்களில் அமலாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர்
கூறினார்.
ஜனவரி 1, 2024 முதல் இந்த ஆண்டு
அக்டோபர் 3 வரை, நாடு முழுவதும் அதிகாரிகள் RM 15 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 1,646
RON95 தொடர்பான வழக்குகளையும், RM36 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 829 சமையல் எண்ணெய் வழக்குகளையும்
பதிவு செய்ததாக அவர் கூறினார்.
குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட எவருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்படலாம்
என்று அவர் எச்சரித்தார்.
முதல் குற்றத்திற்கு அவர்களுக்கு RM1 மில்லியன் வரை அபராதம் அல்லது மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை
விதிக்கப்படலாம், மேலும் மீண்டும்
மீண்டும் குற்றங்களைச் செய்தால் RM3 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படலாம். நிறுவனங்களுக்கு முறையே RM2 மில்லியன் மற்றும் RM5 மில்லியன் வரை அபராதம்
விதிக்கப்படலாம் என்று கூறினார்.
மானிய விலையில் பொருட்களை தவறாகப் பயன்படுத்துவது அல்லது கடத்துவது குறித்து
தனது அமைச்சகத்திற்குப் புகாரளிக்குமாறும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



