RON97 & டீசல் விலை 6 காசுகள் அதிகரிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், அக் 29: RON97 மற்றும் டீசல் விலை ஆறு காசுகள் அதிகரிக்கும் என்று நிதி அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

RON97 லிட்டருக்கு RM3.20க்கும், டீசல் லிட்டருக்கு RM2.95க்கும் விற்பனை செய்யப்படும்.

மானியமில்லாத RON95 பெட்ரோலின் விலை லிட்டருக்கு RM2.60க்கும் அதே நிலையில் தொடரும்.

BUDI95 திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் RON95 பெட்ரோலும் லிட்டருக்கு RM1.99 என்ற நிலையில் தொடரும்.

இதற்கிடையில், சபா, சரவாக் மற்றும் லாபுவானில் டீசலின் சில்லறை விலை லிட்டருக்கு RM2.15க்கும் மாறாமல் உள்ளது.

 இந்த விலை அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை அமலில் இருக்கும்.

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *