9 நாடாளுமன்ற உறுப்பினர்களை நீக்கினால் ஆட்சிக்குப் பாதிப்பு! – Hassan Karim எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

ஜூலை 14,

நீதித்துறையின் நியமனங்களில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் DATUK SERI RAFIZI RAMLI தலைமையில் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருக்கும் கருத்திற்கு எதிராக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கட்சியின் ஒரு சிலர் முன்மொழிவு செய்திருப்பதை PASIR GUDANG நாடாளுமன்ற உறுப்பினரும் பி.கே.ஆர் கட்சியின் மூத்த தலைவருமான Hassan Abdul Karim எதிர்ப்பு தெரிவித்தார். சம்மந்தப்பட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பி.கே.ஆரின் தூண்கள் என்பதைக் கட்சியின் தலைமை நன்கு அறிந்திருக்கும் என தாம் நம்புவதாக Hassan Abdul Karim தெரிவித்தார். 

அவர்களின் குற்றச்சாட்டுகளில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை அரசாங்கம் ஆராய வேண்டுமே தவிர மாறாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை என Hassan Abdul Karim வலியுறுத்தினார். சம்மந்தப்பட்ட 9 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும் என பி.கே.ஆரிந் 19 தொகுதித் தலைவர்கள் வலியுறுத்தியிருப்பதில் எந்த நியாயமும் இல்லை என்றும். அந்த 9 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தெளிவாகக் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பதைதும் Hassan Abdul Karim சுட்டிக்காட்டினார். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது ஆட்சிக்கும் ஆபத்து என்பதை Hassan Abdul Karim நினைவூட்டினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *