9 பேர் கோர விபத்து - பிரதமர் இரங்கல்!

- Shan Siva
- 13 May, 2025
கோலாலம்பூர், மே 13: இன்று காலை தெலுக் இந்தானில் பெடரல் ரிசர்வ் யூனிட்
(FRU) லாரி மோதிய விபத்து தொடர்பாக முழுமையான விசாரணை நடத்துமாறு
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று ஒரு
பேஸ்புக் பதிவில், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது
குடும்பத்தினருக்கும் உரிய உதவி வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
விபத்தில்
உயிரிழந்த அனைத்து FRU பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் அவர் தனது
இரங்கலைத் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில்
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், அனைத்து விஷயங்களும்
எளிதாக்கப்படவும் தாம் பிரார்த்திப்பதாக அன்வார் கூறினார்.
ஜாலான் Jalan Chikus-Sungai Lampam மில் போலீஸ் பிரிவின் லாரி மற்றும் மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதிய விபத்தில் ஒன்பது FRU பணியாளர்கள் உயிரிழந்தனர் மற்றும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்!
Perdana Menteri Anwar Ibrahim mengarahkan siasatan penuh terhadap kemalangan membabitkan lori FRU di Teluk Intan yang meragut sembilan nyawa. Beliau menzahirkan takziah kepada keluarga mangsa dan menggesa bantuan sewajarnya disalurkan, serta mendoakan kesejahteraan mangsa yang cedera.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *