புகழ்பெற்ற சுற்றுலா தலத்தில் கூட்ட நெரிசல்; 30 பேர் பலி

top-news
FREE WEBSITE AD

ஹெய்டி நாட்டின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான சிடடெல் லஃபெரியர் (Citadelle Laferrière) என்ற மலை உச்சிக் கோட்டையில் ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.

ஹெய்டியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க கோட்டை, அந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையங்களில் ஒன்றாகவும், யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. வருடாந்திர கொண்டாட்ட நிகழ்ச்சிக்காக ஏராளமான மக்கள் அங்கு திரண்டிருந்தபோது இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப தகவல்களின் படி, கோட்டையின் நுழைவு பகுதியில் மக்கள் அதிக அளவில் ஒரே நேரத்தில் நெரிசலாக திரண்டதே விபத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது. உள்ளே செல்ல முயன்றவர்களுக்கும் வெளியே வர முயன்றவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளு நிலைமையால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சிலர் மூச்சுத்திணறியும், பலர் ஒருவர்மீது ஒருவர் விழுந்தும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு உடனடியாக மீட்புக்குழுக்கள் மற்றும் மருத்துவ அணிகள் விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *