பெண்களுக்காக போராட வருகிறாள் ஆதிரா

top-news
FREE WEBSITE AD

மலேசியாவின் முன்னணி உள்ளடக்க மற்றும் பொழுதுபோக்கு நிறுவனம் அஸ்ட்ரோ, பெண்கள் அதிகாரமளிப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், புதிய வின்மீன் பிரத்யேக தொடர் ‘ஆதிரா’-வை ஜூலை 14ஆம் தேதி இரவு 9 மணிக்கு வழங்குகிறது. இந்த தொடர் அஸ்ட்ரோ விண்மீன் (சேனல் 202) மற்றும் Astro GO, On Demand, sooka  ஆகியவை மூலமாகக் காணலாம்.

பிரபல மலாய் தொடரான Syurga Itu Bukan Mudah-ஐ அடிப்படையாகக் கொண்டு, நகரமயமான மற்றும் அழகான மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள ‘ஆதிரா’, பெண்கள் குடும்ப வன்முறை உள்ளிட்ட எந்தவொரு அடக்குமுறையிலும் சிக்கிக்கொண்டு மௌனமாக இருப்பதற்கு பதிலாக, உதவி கோருவதை ஊக்குவிக்கிறது.

இத்தொடரை ஆர். அசிசான் இயக்கியுள்ளார். முன்னாள் அழகி மற்றும் நடிகை ருபிணி சம்பந்தன், முதன்முறையாக தலைமை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பாத்திரமான ஆதிரா என்பது சமூகக் கட்டுப்பாடுகளையும், பாரம்பரிய நிலைப்பாடுகளையும் உடைக்கும் துணிச்சலான பெண்மையை பிரதிபலிக்கிறது.

கதையின் மையம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களைச் சுற்றி நடைபெறுகிறது. கணவர் தர்மா ஒரு விஷமமான ஆண்கள் குழுவின் ஒரு பகுதியாக இருப்பதால், ஆதிராவின் வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாகிறது. அவர்களது குழந்தையின் பாதுகாப்பு கேள்விக்குள்ளானபோது, ஆதிரா தன்னையும், தனது குழந்தையையும் காப்பாற்ற விடுதலை தேடுகிறாளா அல்லது துன்பத்துடன் வாழ தீர்மானிக்கிறாளா என்பதுதான் தொடரின் மையக்கரு.

இந்தத் தொடரை எலினா தாமஸ் (Keris Media Networks Sdn Bhd) தயாரித்துள்ளார். முக்கிய வேடங்களில் ருபிணி சம்பந்தன், தீபன் ஜி, சாரா செல்வா, கவிதா சின்யா, கார்த்திக் ஜே, அங்கயர் கன்னி, பிரிசில்லா நாயர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

‘ஆதிரா’ தொடர் திங்கள் முதல் வியாழன் வரை இரவு 9 மணிக்கு அஸ்ட்ரோ விண்மீன் (சேனல் 202)-இல் ஒளிபரப்பாகும்.  Astro GO, On Demand, sooka மூலமாகவும் காணலாம்.

மேலும் அஸ்ட்ரோ வணிகத்தின் உள்ளடக்கம், இந்திய வாடிக்கையாளர் மூத்த உதவி துணைத் தலைவர் ஜெகன் மாணிக்கம் கூறுகையில் மலாய் மொழியில் வெளிவந்த இத்தொடர் மிக பெரிய வெற்றி பெற்ற வகையில் அது தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது இதுதான் முதல் முறை.இன்றைய இளைஞர்கள், திருமணம் செய்யாதவர்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தொடர் இது.எங்களின் முதல் நோக்கமெ தமது சமூதாயத்தில் நடக்கும் வன்கொடுமைகளிலிருந்து தைரியமாக சாவல்களை எதிர்கொள்ளும் பெண்களை உருவாக்க வேண்டும்.அதற்கான ஒரு விழிப்புணர்ச்சியாகத்தான் ஆதிரா தொடர் இருக்கும் என்றார்.

தொடர்ந்து மகளிர் உதவி அமைப்பு (WAO) இயக்குநர் நஸ்ரின் நிசாம் கூறுகையில் மலேசியாவில் பெண்கள் மீதான வன்முறையை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வரும் Women’s Aid Organisation (WAO), தற்போது ‘ஆதிரா’ தொடர் போன்ற ஊடக உள்ளடக்கங்கள் சமூக விழிப்புணர்வுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

1983ஆம் ஆண்டு தொடங்கி, WAO அமைப்பு குடும்ப வன்முறையை எதிர்த்து பெண்களுக்கு ஆதரவு தரும் பணியை தொடர்ந்து செய்து வருகிறது. இந்நிறுவனம் பல்வேறு வகையான பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிராக தங்கும் இடம், வழக்குகள் மேலாண்மை, சட்ட உதவி, மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் ஆதரவு வழங்குகிறது.

“வன்முறையை அனுபவிக்கும் பெண்களுக்கு காவல் நிலையம், மருத்துவமனை போகும் அனுபவங்கள் கூட பயமளிக்கும். எங்கள் சமூகப்பணியாளர்கள் அவர்களுடன் இருந்து வழிகாட்டுகிறார்கள்,” என அவர் கூறினார்.

சட்டங்கள் இருந்தாலும், அவை பின்பற்றப்படுவது மிகமுக்கியம் என்பதையும், சட்ட அமல்படுத்தலில் உள்ள குறைகள் குறித்து அரசு முகமைகளுடன் WAO தொடர்ந்து பணியாற்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.WAO தனது திறன் மேம்பாட்டு பிரிவின் மூலம் பள்ளி மாணவ, மாணவிகளிடம் பாலின சமத்துவம், ஒப்புதல், ஆரோக்கிய உறவுகள் போன்றவைகளைப் பற்றி பேசுகிறது.

“சமூகத்தில் வன்முறையை சாதாரணமாகக் காணும் மனப்பாங்கை மாற்றும் பணியும் நமது இலக்குகளில் ஒன்றாகும். பெரும்பாலான சமுதாயங்களில், பெண்களைப் பழிப்பது வழக்கமாகவே பார்க்கப்படுகிறது. இதுவே, குடும்பத்திற்குள் வன்முறையை நிலையானதாக மாற்றுகிறது,” என அவர் கூறினார்.

“ஒரு பெண் அடிக்கப்படுகிறாள் என்றால், ‘அவள்தான் ஏதாவது செய்திருப்பாள்’ என பலர் பழிக்கும் மனப்பாங்கு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது. இதை மாற்ற வேண்டியது அவசியம்.”அஸ்ட்ரோ விண்மீனியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள ‘ஆதிரா’ தொடரைப் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில்,  “ ஆதிரா மிகவும் முக்கியமான சமூக வழிகாட்டி” எனக் குறிப்பிட்டார்.இது ஒரு உணர்வுப்பூர்வமான கதையாக இருந்தால், அவர்கள் இதன்மூலம் வன்முறையைப் புரிந்து கொள்வார்கள். சிலருக்கு இது நேரடியாக நடந்த அனுபவம் இல்லையென்றாலும், இது அவர்களின் பார்வையை மாற்றும்,” என அவர் கூறினார்.

“சில சமயம், பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூட உதவி செய்யாத போது, இத்தகைய தொடர்கள் அவர்களுக்கு ஊக்கமாக இருக்கும். தனிமையில் அல்லர் என்பதையும், அவர்களுக்கும் உரிமைகள் உள்ளன என்பதையும் புரிந்து கொள்வார்கள்.”

மேலும், சமூகமே வன்முறையை ஏற்றுக்கொள்ளும் பண்பாட்டை “இது கலாச்சாரம்” என்ற பெயரில் பாதுகாத்தல் சரியானதல்ல என்றும், சமூக பாதுகாப்புக்காக இதை மாற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *