ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவனைக் கடித்துக்கொன்ற முதலை

top-news
FREE WEBSITE AD

உத்தரபிரதேசம், ஜூலை 18-

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ராய்ச் மாவட்டத்தில் உள்ள காக்ரா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவனை முதலை தாக்கி இழுத்துச் சென்று கொன்ற சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜா பாபு என்ற சிறுவன் தனது உறவினருடன் வயல்வெளி பணிகளை முடித்துவிட்டு ஆற்றில் குளிக்கச் சென்றபோது இந்த துயர சம்பவம் நிகழ்ந்தது.

ஆற்றங்கரையில் கை, கால்களை கழுவிக் கொண்டிருந்தபோது திடீரென நீரில் இருந்து வெளியே வந்த முதலை, சிறுவனின் காலை கடித்து ஆற்றின் ஆழப்பகுதிக்குள் இழுத்துச் சென்றது. சிறுவனின் உறவினரும், அருகில் இருந்த கிராம மக்களும் கற்கள் மற்றும் கம்புகளைப் பயன்படுத்தி முதலையை விரட்ட முயன்றாலும், அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை. சிறுவனை மீட்க முடியாமல் போனது அப்பகுதி மக்களை வேதனையில் ஆழ்த்தியது.

தகவல் அறிந்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தேடுதல் பணியைத் தொடங்கினர். சுமார் ஐந்து மணி நேர தேடுதலுக்குப் பிறகு, ஆற்றில் இருந்து சிறுவனின் உடல் மீட்கப்பட்டது. முதலையின் தாக்குதலால் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண உதவி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *