சபா - நிலச்சரிவில் புதையுண்டவர் பிணமாக மீட்பு!

top-news
FREE WEBSITE AD

கோத்த கினபாலு, செப் 12: பெனாம்பாங்கின் கம்போங் சராபுங்கில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் புதைந்து காணாமல் போனதாகக் கூறப்பட்ட 97 வயது முதியவர் இன்று காலை இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

 தேடுதல் மற்றும் மீட்புக் குழு காலை 10.35 மணிக்கு அவரது வீட்டின் கீழ் தளத்தில் பாதிக்கப்பட்டவரின் உடலைக் கண்டுபிடித்ததாக சபா தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை (ஜேபிபிஎம்) ஒரு அறிக்கையில் கூறியது.

தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் கிராமவாசிகளின் உதவியுடன், வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளிலிருந்து பாதுகாப்பான பகுதிக்கு ஸ்ட்ரெச்சரைப் பயன்படுத்தி 750 மீட்டர் தூரம் அவரைத் தூக்கிச் சென்றதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் மேல் நடவடிக்கைக்காக உடல் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *