சபா, மக்கள் மடானி திட்டம்: வருகையாளர்களுக்கு சுவாரசிய நடவடிக்கைகள்!

top-news
FREE WEBSITE AD

தாவாவ், மே 11-

தொடர்பு அமைச்சின் ஏற்பாட்டில் சபாவில் நடைபெறும் 2025 மக்கள் மடானி திட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பல்வேறு சுவாரசியமான நடவடிக்கைகள் காத்திருக்கின்றன.அதோடு, தனது சேவை குறித்து மக்களுக்கு விரிவாக விளக்கமளிக்கும் வகையில், மலேசிய தேசிய செய்தி நிறுவனம், பெர்னாமாவும் இந்நிகழ்ச்சியில் இணைந்துள்ளது.

பெர்னாமா உட்பட தொடர்பு அமைச்சின் கீழ் செயல்படும் அனைத்து நிறுவனங்கள் குறித்தும் அறிந்துகொள்ளும் வாய்ப்பை இந்த மக்கள் மடானி திட்டம் அளிப்பதாக பெர்னாமாவின் நிர்வாக விவகாரப் பிரிவு உதவி நிர்வாகி முஹமட் சுஹெர்மான் அனுவார் தெரிவித்தார்.அதோடு, சபா மக்களின் மத்தியில் இச்செய்தி நிறுவனம் தொடர்பிலான புரிதலை மேம்படுத்துவதாக அவர் கூறினார்.

"இங்கு வருபவர்களில் பலர் பெர்னாமாவின் சேவையில் மகிழ்ச்சி அடைகிறார்கள். பெர்னாமா தொலைக்காட்சியை பார்ப்பதில் அவர்கள் மகிழ்ச்சி கொள்கிறார்கள். மற்றவர்களுக்கு பெர்னாமாவின் சேவை குறித்து நாங்கள் விளக்கமளிக்கிறோம்," என்றார் அவர்.நேற்று, தாவாவ், மக்கள் மடானி திட்டத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

Dalam program Madani Rakyat 2025 yang diadakan di Sabah, Pelbagai aktiviti menarik akan dilaksanakan. Berita Nasional Malaysia, Bernama, turut terlibat untuk memberi penerangan tentang perkhidmatan mereka kepada orang ramai, meningkatkan pemahaman tentang peranan Bernama.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *