கொடூர தாக்குதல் – இளைஞர் உயிரிழப்பு, சகோதரியின் கை துண்டாகும் நிலை
- Surendran Sumdraraj
- 10 Mar, 2026
சுங்கை பட்டாணி, மார்ச் 10-
இங்குள்ள தாமான் கெம்பாஸ் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கொடூர தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது சகோதரியின் துண்டாகும் அளவிற்கு கடுமையாக காயமடைந்துள்ளார்.
கோலா மூடா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர் இருபது வயதின் இறுதியில் உள்ள இளைஞர் என தெரிவித்தார்.
அவர் கூறுகையில், குறித்த இளைஞர் தனது வீட்டின் முன்பாக பல முறை கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதாகவும், அதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் கூறினார்.
“இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் இன்று அதிகாலை 2 மணி வரை இடையில் நடந்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று அவர் தெரிவித்தார்.
இதே சம்பவத்தில், உயிரிழந்தவரின் தங்கை கடுமையாக காயமடைந்துள்ளதாகவும், அவரது கை துண்டாகும் அளவிற்குத் தாக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டது.
காயமடைந்த அந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் காரணங்களை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் காண முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



