பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு”எதிராக நடவடிக்கை எடுக்க அமைச்சரவை இணக்கம்!

top-news
FREE WEBSITE AD

மெர்சிங், ஆக. 18-

அண்மைய தேசியக் கொடி விவகாரம் தொடர்பில், உணர்ச்சியை தூண்டி விடும் “பொறுப்பற்ற அரசியல்வாதிகளுக்கு' எதிராக உறுதியான நடவடிக்கை எடுப்பதென்று அண்மையில் கூடிய அமைச்சரவை முடிவு செய்திருப்பதாக, மத்திய அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தேசிய தினத்திற்கான பொதுமக்களின் உற்சாகத்தைக் குறைக்கும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இதர அமைச்சர்களும் "மிகவும் கவலைப்பட்டனர்" என்று. அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டு பிடிப்புத் துறை அமைச்சர் சாங் லி காங் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பிலான போலீஸ் விசாரணையின் ஓர் அறிக்கை குறித்து கருத்துரைத்த அவர்,"நீதிமன்றத்தில் ஒருவர் மீது குற்றம் சுமத்தக்கூடுமா என்பதைக் காண நாம் காத்திருக்க வேண்டும்” என்று நேற்று முன்தினம் சனிக்கிழமை கிள்ளானில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது சாங் கூறியதாக பிரபல செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சமூக வலைத் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு காணொளி குறித்து கருத்துரைத்த அவர், சுதந்திர மாத காலகட்டத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய ஒரு “பொறுப்பற்ற அரசியல்வாதியை” அவர் சாடினார்.

பினாங்கின் கப்பளா பத்தாஸில் உள்ள ஒரு கடையின் உரிமையாளர் தமது கடைக்கு வெளியில் தேசியக் கொடியை தவறுதலாக தலைகீழாக பறக்க விட்டிருந்த பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் பெர்சத்து கட்சிகளின் இளைஞர் பிரிவினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால் சாலேயைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்று கருதப்படுகிறது.

"நாம் ஒரே நாடு. மக்கள் சட்டத்திற்கு உட்பட்டவர்கள். ஒரு பிரச்சினை எழுந்தால், அது குறித்து போலீசில் புகார் செய்ய வேண்டும். நடவடிக்கையை எடுக்கும் பொறுப்பை போலீசாரிடமே விட்டுவிட வேண்டும்.

"நீங்கள் ஓர் அமலாக்கா நிறுவனமல்ல. ஒருவரின் கடைக்கு உங்களின் விருப்பம்போல் ஒரு கும்பலை அழைத்துச் சென்று அவர்களின் வர்த்தகத்திற்கு இடையூறு செய்யவும் பகடிவதை புரியவும் கூடாது. இதில் நான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது அனைவருக்கும் தெரியும்" என்று சாங் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *