ஜாலான் ஸெமங்கரில் கேபிள் திருட்டு!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

கோத்தா திங்கி, அக்.13-

ஜொகூர், கோத்தா திங்கி ஜாலான் ஸெமங்கர் சாலையில் கேபிள் திருட்டுச்சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 11, 2025 அன்று. This is Johor' என்ற பேஸ்புக் கணக்கின் மூலம், கேபிள் திருடுவதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை பிடிக்க முயன்ற பொதுமக்களிடமிருந்து தப்பி ஓடும் ஒருவரின் காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகியது. இதனைத் தொடர்ந்து, அந்தப் பதிவை போலீசார் கவனத்தில் எடுத்துள்ளனர்.

அதே நாளில் மாலை சுமார் 6.38 மணியளவில், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது தொடர்பாக ஒரு மலாய் பெண், போலீசில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 431Aன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவம் குறித்த எந்தவொரு தகவலையும் கொண்டிருக்கும் பொதுமக்கள் முன்வந்து, விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் தன் ஜியா ஜூன் (016-9195285) அவர்களைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது அருகிலுள்ள எந்தவொரு போலீஸ் நிலையத்திற்கும் சென்று தகவல் அளிக்குமாறு. கோத்தா திங்கி போலீஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், போலீஸ் ஹாட்லைன் 07-8831222 என்ற எண்ணிலும் தகவல் வழங்கலாம்.குற்றவியல் சட்டம் பிரிவு 431இன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என போலீஸ் எச்சரித்துள்ளது.கோத்தா திங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பரிண்டண்ட் யூசோப் பின் ஹாஜி ஒஸ்மான் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *