நகைச்சுவை நடிகர் சத்யாவை மருத்துவமனையில் சந்தித்த துணை அமைச்சர்!

top-news
FREE WEBSITE AD

ஆகஸ்ட் 4,

மலேசியத் திரைப்படங்களில் பல மொழிகளில் நடித்து புகழ்பெற்ற கலைஞரான சத்யாவைத் தொடர்பு அமைச்சின் துணை அமைச்சர் TEO NIE CHING மருத்துவமனையில் சந்தித்தார். கடந்த திங்கள் உடல்நலன் பாதிக்கப்பட்டு அம்பாங் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சத்யா இன்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார். கலைத்துறையில் ஈடுபட்ட சத்யா போன்றவர்களைத் தொடர்ந்து ஆதரிக்கும் பொறுப்பு நமக்கு இருப்பதை அனைவரும் உணர்ந்து அவரின் உடல்நலன் சீராக அனைவரும் பிராத்திப்போம் என துணை அமைச்சர் தியோ நீ செங் கேட்டுக்கொண்டார். 

தேசிய திரைப்பட நிறுவனமான FINAS கலைஞர்களின் நலன் காப்பதில் உறுதியுடன் இருப்பதாகவும் கலைஞர்களுக்கான நலத்திட்டங்களைப் பெற எந்த நேரத்திலும் தேசிய திரைப்பட நிறுவனமான FINAS=ஐ தொடர்புக் கொள்ளும்படியும் துணை அமைச்சர் TEO NIE CHING வலியுறுத்தினார். கடந்த ஜூலை 31 வரையில் 112 கலைஞர்களுக்கு FINAS நலத்திட்ட  உதவிகள் வழங்கியிருப்பதை TEO NIE CHING நினைவூட்டினார். என் நலனுக்காகப் பிராத்தனை செய்த அனைத்து அன்பர்களுக்கும் நடிகர் சத்யா உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். நான் இன்னும் நலமாக இருக்கிறேன். இன்னும் சில கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். முதலில் வீடு திரும்பியதும் எனது பேரக்குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட வேண்டும்” என நகைச்சுவையாக பேசினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *