PTPTN கடனுதவியை ஒழிப்பதாக இப்போது பேசட்டும்! ADAM ADLIக்கு PUAD ZARKASHI சவால்!

top-news
FREE WEBSITE AD

டிசம்பர் 17,

பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் வழங்கும் PTPTN கடனுதவியை ரத்து செய்ய வேண்டும் என போராடிய ADAM ADLI உயர்கல்வி அமைச்சின் துணை அமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் இப்போது ADAM ADLI கடனை ரத்து செய்து மாணவர்களுக்கு இலவசக் கல்வியைக் கொடுக்க முடியுமா என்பதைத் தாம் காத்திருந்து பார்க்க போவதாக ஜொகூர் மாநிலச் சட்டமன்றச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார். புதிய துணை அமைச்சருக்கு என் வாழ்த்துகள் என்றாலும் அடாம் அட்லி என் சவாலை ஏற்றுக்கொள்வாரா என Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார்.


எதிர்கட்சியாக இருந்து கொண்டு எதை வேண்டுமானாலும் பேசலாம். கடந்த 2010 ஆம் ஆண்டு இதே அடாம் அட்லி பல்கலைக்கழக மாணவர்களுக்கு அரசாங்கம் இலவசமாகக் கல்வி வழங்க வேண்டும் என்றும் PTPTN கடனுதவியை ஒழிக்க வேண்டும் என கூப்பாடு போட்டு போராட்டம் நடத்தினார். இப்போது அதே அமைச்சுக்கு அடாம் அட்லி துணை அமைச்சராக வந்துள்ளார். அடாம் அட்லிக்கு இப்போது தெரியும். அந்த பொறுப்பின் மகத்துவமும், அந்த நாற்காலி எவ்வளவு வெப்பமானது என்பதை ADAM ADLI இனி உணர்வார் என ஜொகூர் மாநிலச் சட்டமன்றச் சபாநாயகரும் அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான Datuk Dr Puad Zarkashi தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *