மடானி அரசின் மலிவான முயற்சி!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, பிப் 10: இந்த ஆண்டு முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்குத் தயாராகி வருவதாக பெர்சாத்து கூறியதிலிருந்து, மாட்சிமை தங்கிய மாமன்னருக்கு எதிராகச் செயல்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் உட்பட, கட்சி பற்றி கூறப்பட்ட விமர்சனங்களை பெர்சத்து இளைஞர் பிரிவுத்  தலைவர் தற்காத்துப் பேசியுள்ளார்.

ஜனநாயகத்திற்கு உறுதியளித்த ஒவ்வொரு அரசியல் கட்சியும் எப்போதும் தேர்தலுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வது அதன் பொறுப்பு என்று செபராங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் இஸ்ஹார் ஷா அரிஃப் ஷா கூறினார்.

பேரரசரின் விருப்பங்களை பெர்சாத்து அவமதித்ததாகக் குற்றம் சாட்டும் சம்பந்தப்பட்ட எம்.பி.க்களின் கூற்றுகள், மடானி அரசாங்கத்தின் தோல்விகளிலிருந்து பொதுமக்களின் கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு மலிவான முயற்சியாகும்  என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

 அன்வார் இப்ராஹிம் நிர்வாகம் பொருளாதாரத்தை நிர்வகிக்கத் தவறியதாகவும், வாழ்க்கைச் செலவு உயர்வைக் கட்டுப்படுத்தத் தவறியதாகவும் குற்றம் சாட்டிய அவர், அன்வார் இப்ராஹிம் நிர்வாகத்தின் மீது மலேசியர்கள் பொதுவாக நம்பிக்கையை இழந்து வருவதாகவும் அவர் கூறினார்.

எனவே, முன்கூட்டிய பொதுத் தேர்தலுக்கான சாத்தியக்கூறு என்பது நிராகரிக்க முடியாத ஓர் உண்மை என்று பெர்சத்து இளைஞர்களின் தேர்தல் பணியகத்தின் தலைவரான இஸ்ஹார் கூறினார்.

பெர்சத்து தலைவர் முகைதீன் யாசின், இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலுக்குத் தயாராக, கட்சியின் இயந்திரத்தை உடனடியாக அணிதிரட்ட உத்தரவிட்டதாக கடந்த வெள்ளிக்கிழமை, பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலி,  தெரிவித்தார். இதற்கு பதில்கூறும் விதமாக பக்காத்தான் ஹராப்பான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *