ராதிகா தாயார் இறப்பில் ராதா ரவி-கதறி அழுத நிரோஷா!

top-news
FREE WEBSITE AD

பிரபல நடிகை ராதிகா மற்றும் நிரோஷா ஆகியோரின் தாயாரும், மறைந்த நடிகர் எம்.ஆர். ராதாவின் மனைவியுமான கீதா ராதா, நேற்று வயது மூப்பின் காரணமாகக் காலமானார்.அவரது மறைவு, திரையுலகினர் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கீதா ராதாவின் உடல், போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

நடிகை ராதிகா, தனது அம்மாவின் மறைவு குறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்து, உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அவரது மகளும், கீதா ராதாவின் பேத்தியுமான ரேயான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது பாட்டி ஒரு அற்புதமானவர். அவர் ஒரு போராளி. எனது அம்மா ராதிகா மற்றும் அவரது தங்கை நிரோஷாவையும், பேத்தி என்னையும் கஷ்டப்பட்டு வளர்த்தார்" என்று கண்ணீருடன் பதிவிட்டிருந்தார். ஒரு தாயின் போராட்டத்தையும், தன்னலமற்ற அன்பையும் இந்தப் பதிவுகள் வெளிப்படுத்தின.

தாயாரை இழந்த சோகத்தில் இருந்த நடிகை ராதிகாவிற்கு அஞ்சலி செலுத்த, நடிகர் ராதாரவி, நடிகர் பிரபு உள்ளிட்ட பல முக்கியப் பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தனர். அப்போது ராதிகா மற்றும் நிரோஷா அழுது புலம்பிய காட்சிகள், பார்ப்போரின் கண்களையும் கலங்கச் செய்தன.

கீதா ராதாவின் உடல், இன்று மாலை 4:30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது. அவரது இழப்பு, குடும்பத்தினருக்கு மீள முடியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *