ஹாடி அவாங் மருமகன் திடீர் கைது!
- Shan Siva
- 15 Sep, 2025
கோலாலம்பூர், செப் 15: கோலாலம்பூர், கம்போங் சுங்கை பாருவில் கடந்த வாரம் நடந்த சம்பவம் தொடர்பாக
சுங்கை பூலோ பாஸ் தலைவர் ஜஹாருதீன் முஹம்மது போலீசாரால் கைது செய்யப்பட்டதாகக்
கூறப்படுகிறது.
பாஸ் தலைவர்
அப்துல் ஹாடி அவாங்கின் மருமகனான ஜஹாருதீன் இன்று அதிகாலை 1.30 மணியளவில் அவரது
வீட்டில் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் பாஸ் யூத் தெரிவித்துள்ளது. பின்னர் அவர்
டாங் வாங்கி காவல் தலைமையகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.
கம்போங் சுங்கை
பாருவில் பல குடியிருப்பாளர்களின் வெளியேற்றங்கள் குறித்து ஜஹாருதீன் பேசியதால்
தான் அவரது திடீர் கைது நடந்ததாக சிலாங்கூர் பாஸ் யூத் தலைவர் சுக்ரி உமர்
கூறினார்.
இது கொடூரமானது டென்பதோடு
மனிதாபிமானமற்றது என்று அவர் தெரிவித்தார். மக்களுக்காக குரல் கொடுத்ததற்காக
நள்ளிரவில் ஒரு மதகுருவை கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத மிரட்டல் வடிவம் என்று
அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
டாங் வாங்கி
காவல் தலைவர் சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான், ஜஹாருதீன் கைது
செய்யப்பட்டதை உறுதிப்படுத்தினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



