ஹாடி அவாங் – முகைதீன் பதவி விலக வேண்டும்! - முன்னாள் சட்டத்துறை அமைச்சர் அறிவுறுத்து!

top-news
FREE WEBSITE AD


கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்றத்‌ தொகுதி இடைத்தேர்தலில்‌ பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி தோல்வி கண்டிருப்பதைத்‌ தொடர்ந்து, பெர்சத்து தலைவர்‌ முகைதீன்யாசினும்‌ பாஸ்‌ தலைவர்‌ அப்துல் ஹாடி அவாங்கும்‌ பதவி விலக வேண்டும்‌ என்று முன்னாள் சட்ட அமைச்சர்‌ ஸைட் இப்ராஹிம்‌ வலியுறுத்தியுள்ளார்‌.                 

அத்தேர்தலில், பக்காத்தான் ஹராப்பானின், பாங்சோக் தாவ் 14.000 வாக்குகள் பெற்றுள்ளவேளையில், பெரிக்காத்தான் நேஷனல் வேட்பாளர் கைருல் அசாரி 10,131 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன்வழி, ஐசெகவைச் சேர்ந்தவரான பாங் 3,869 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

இதர இருவரான சுயேச்சை வேட்பாளர் நியாவ் கே ஸின் மற்றும் பிஆர் எம் கட்சி வேட்பாளர் ஹஃபிஸா சைனுடின் ஆகியோர் வைப்புத் தொகையைப் பறிகொடுத்தனர். இது பற்றி தமது எக்ஸ் தளப் பதிவில் நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஸாயிட், 76 வயதை அடைந்துள்ள முகைதீனும், ஹாடியும் புதிய சிந்தனைகள் கொண்ட இளம் தலைவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கிக் கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முஹிடின் பெரிக்காத்தானின் தலைவராகவும் ஹாடி துணைத் தலைவராகவும் பதவி வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இடைத்தேர்தல் முடிவைப் பார்க்கம்போது பக்காத்தான் ஹராப்பான் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. புதிதாகச் செய்வதற்கு பெரிக்காத்தானிடம் எதுவும் இல்லை. அது எதுவுமேசெய்ததும் இல்லை. அவ்விரு தலைவர்களுக்கும்அதிக வயதாகி விட்டது. அவர்களின் சிந்தனைகளும் பழையவையாகத்தான் உள்ளன என்று ஸைட் சுட்டிக்காட்டினார்.

முகைதீன் பிரதமராக இருந்த வேளையில், தமது சாதனைகள் குறித்து விடாமல் பேசிக் கொண்டிருப்பார். அது கடந்த காலம்.

ஆனால், எதிர்காலத்தில் அவர் என்ன உத்தேசித்துள்ளார்‌? எதுவுமே இல்லை. அவர்‌ பதவி விலக வேண்டிய நேரம்‌ வந்துவிட்டது.

சிங்கப்பூரில்‌ உள்ள மலாய்க்காரர்களுக்கு என்ன நடந்தது என்று ஐசெகவை பற்றி ஓர்‌ அச்ச உணர்வை அவர்‌ ஏற்படுத்திக்‌ கொண்டிருக்கிறார்‌. இந்த அச்சுறுத்தல்‌ தந்திரங்கள்‌ இனிமேலும்‌எடுபடாது. பதவி விலக அவருக்கும்‌ நேரம்‌ வந்துவிட்டது என்றார்‌ ஸாயிட்.

கடந்தாண்டு நடைபெற்ற பெர்சத்து பொதுப்பேரவையில்‌ உரையாற்றிய முஹிடின்‌, பெர்சத்து தலைவர்‌ பதவிக்குப்‌ போட்டியிடப்‌ போவதில்லை என்று திடீறென்று அறிவித்தார்‌. அம்முடிவை பாகோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர்‌ பின்னர்‌ மாற்றிக்‌ கொண்டார்‌. தலைவர்‌ பதவியில்‌ தொடர்வதற்குத்தான்‌ அவர்‌ அந்த தந்திரத்தைச்‌ செய்தார்‌ என்று பின்னர்‌ தெரிந்தது.

ஹாடியும்‌ அடிக்கடி உடல்நலிவுக்கு ஆளாகி வருகிறார்‌. அண்மைய சில ஆண்டுகளில்‌ பல தடவை அவர் IJN ‌ மருத்துவமனையில்‌ அவர்‌ சிகிச்சை பெற்றுள்ளார்‌.

எதிர்காலத்தில்‌ நாட்டை எப்படி வழிநடத்திச்‌ செல்ல வேண்டும்‌ என்ற தெளிவான திட்டம்‌ எதுவும்‌ பெர்சத்துவிடம்‌ இல்லை என்றும்‌ அவர் சொன்னார்‌.

கெராக்கான்‌, மலேசிய இந்திய மக்கள்‌ கட்சி போன்ற சிறு கட்சிகளைத்‌ தங்களுடன்‌ சேர்த்துக்‌ கொண்டதைத்‌ தவிர புதிதாக அது எதுவும்‌ செய்யவில்லை என்றார்‌.

இதனிடையே, பாஸ்‌ கட்சியில்‌ உள்ள உலாமாக்கள்‌ ( சமய அறிஞர்கள்‌) அனைவரும்‌ பதவி விலக வேண்டும்‌ என்றும்‌ அவர்‌ கோரிக்கை விடுத்தார்‌. கட்சிக்குப்‌ புத்துயிரூட்டஇளம்‌ தலைவர்களுக்கு இது வழிவிடும்‌ என்று அவர்‌ சுட்டிக்‌ காட்டினார்‌!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *